
பூகோளத்தின் பிரதிபலிப்போ
பூத்திருக்கும்
வர்ணக் கற்றைகள்!
மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!
வானில் காவடி வடிவில்
கண்ணைக் கவரும்
ஸப்த வர்ணங்கள்!
ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!
-ஈழவன் களத்துமேடு-
(சோதரி ஹேமா துலாவுக்கு விளக்கம் கேட்டிருந்தார் அவருக்கு இப்படம் சமர்ப்பணம்)
9 பின்னூட்டங்கள்::
நன்றி நன்றி நன்றி.வானவில்லுக்காய் துலாக் கீறிக் காட்டிய எங்கள் ஈழவனுக்கு மிக்க நன்றி.என் சாட்டில் அழகான கவிதையும் எழுதிவிட்டீர்களே!இப்போதே தமிழ்பறவை அண்ணாவுக்கு பின்னூட்டம் போடுகிறேன்.அவர்தான் துலா என்றால் என்ன என்று கேட்டிருந்தார்.
நன்றி ஈழவன்.... துலாக்குளியல் படம் வரைந்து விளக்கியமைக்கு...
வருகைக்கு நன்றி ஹேமா.
இலக்கியமேட்டுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்ட தமிழ்ப்பறவையை வரவேற்கின்றேன்.
//நன்றி ஈழவன்.... துலாக்குளியல் படம் வரைந்து விளக்கியமைக்கு...//
ஹேமா யாழ்.கோண்டாவில் கிணற்றில் குளிக்கும் காட்சி எப்படி உள்ளது?
ஐயோ...அது நானா !!!!
நல்ல கற்பனைதான்.
///ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!//
அழகான கவிதை
அன்புடன் ஜீவன்
மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!
m....super
நன்றி ஜீவன்.
/////ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!//
அழகான கவிதை
அன்புடன் ஜீவன்//
நன்றி மெல்போர்ன் கமல்.
//மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!
m....super//
Post a Comment