தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

வானவில்

பூகோளத்தின் பிரதிபலிப்போ
பூத்திருக்கும்
வர்ணக் கற்றைகள்!

மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!

வானில் காவடி வடிவில்
கண்ணைக் கவரும்
ஸப்த வர்ணங்கள்!

ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!

- ஈழவன் -

இனி எமக்கெதற்கு ...



இனி எமக்கெதற்கு...

மனிதத்தை மறுதலித்து
மக்களை அரணாக வைத்து
தாம் தப்பினால் போதுமென
பல்லாயிரம் மக்களை பலியெடுத்து
வரலாற்றில்
புத்திஜீவிகளின் தடமழித்து
துரோகத்தனத்தை இந் ஜென்மத்துப்
பதிவேட்டில் நிரந்தரமாய் பதிவாக்கி
முட்கம்பி வேலிக்குள்
முகமறியாமல் மக்களை முடக்கி
ஊனமுற்ற சந்ததியை பிரசவித்து
தாங்களும் தடமின்றி அழிந்த கதை
இனி எமக்கெதற்கு !

விடுதலைப் போரின் விளைச்சல் !


கால் நூற்றாண்டு கால
விடுதலைப் போராட்டம்
எமக்குத் தந்த பரிசு
மனித அரவமற்ற சுடுகாடும்,
அரைகுறையாய்க் கிண்டிய கிடங்கினுள்
அவசரமாய்ப் புதைத்த மனிதப் பிண்டங்களும்
எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளுமே!

உண்ண உணவின்றி
அணிய உடையின்றி
ஒதுங்கக் கூரையின்றி
பரட்டையாய் கலைந்த
கேசத்துடனுன் நாடோடியாய்
எலும்புக் கூடாய் நலிந்ததே
நம்மினம்!

துப்பாக்கி வேட்டுக்கும்
செல் வீச்சுக்கும் பயந்து
பதுங்குகுழியில் பதுங்கிய
எம்மினம் அதனுள்ளே
மௌனித்ததே!

ஊனமுற்ற உடலங்களும்
உயிரற்ற சடலங்களும்
பட்டினியால் நலிந்த தேகங்களும்
குண்டு துளைத்த தேசமும்
கால் நூற்றாண்டு போராட்டத்தின்
விளைச்சலே!

------ஈழவன்------

எதற்காக இந்த இலக்கு ?


எதர்காக இந்த இலக்கு ?

வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!

பச்சைக்கிளியாம்
ம்ம்ம்,
பச்சையாக் காட்டுவதால்
பசுமையானாயோ!

வயிற்றுப்பசிக்கு
உண்டி தேட
உடலை விற்றுப்
வாழலாமா!

கூலி வேலை செய்தாலே
இன்பமாய்க் கூடியிருந்து
குடும்பமாய்க்
குடிக்கலாமே கூழ்!

நீயும் அழிந்து
உன்னை முகர்ந்தோரையும் அழித்து
நாகரீக வாழ்வுக்குப்
பணம் தேடும் பாவையே
எதற்காக இந்த இலக்கு!

உன்னைத் தொட்டானே
அவனும் கெட்டான்
அவஸ்த்தைப் பட்டான்
நோயை உண்டான்
வாழ்வை இழந்தான்!

அவளின் சில நிமிட சுகம்
அள்ளித் தந்த பரிசாய்
ஊரார் தூற்ற உறவினர் சிரிக்க
குடும்பத்தால் தனிமைப்பட்ட
எயிற்ஸைச் சுமந்த வாழ்வு!

"வானம் வெளித்த பின்னும்" வலைப்பதிவின் 'அவள்' கவிதைக்கு பதில்