
கால் நூற்றாண்டு கால
விடுதலைப் போராட்டம்
எமக்குத் தந்த பரிசு
மனித அரவமற்ற சுடுகாடும்,
அரைகுறையாய்க் கிண்டிய கிடங்கினுள்
அவசரமாய்ப் புதைத்த மனிதப் பிண்டங்களும்
எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளுமே!
உண்ண உணவின்றி
அணிய உடையின்றி
ஒதுங்கக் கூரையின்றி
பரட்டையாய் கலைந்த
கேசத்துடனுன் நாடோடியாய்
எலும்புக் கூடாய் நலிந்ததே
நம்மினம்!
துப்பாக்கி வேட்டுக்கும்
செல் வீச்சுக்கும் பயந்து
பதுங்குகுழியில் பதுங்கிய
எம்மினம் அதனுள்ளே
மௌனித்ததே!
ஊனமுற்ற உடலங்களும்
உயிரற்ற சடலங்களும்
பட்டினியால் நலிந்த தேகங்களும்
குண்டு துளைத்த தேசமும்
கால் நூற்றாண்டு போராட்டத்தின்
விளைச்சலே!
------ஈழவன்------
6 பின்னூட்டங்கள்::
ஈழவரே!
அருமையான கவிதை!வீட்டிலிருந்தவர்களைக் காட்டுக்குக் கொண்டுசென்று பின்னர் எதிரியிடமே போய் இன்று தண்ணீருக்குக் கையேந்தும் நிலைக்குக் கொண்டுவந்ததுதான் எமது விடுதலை வீரர்களின் கடைசி நிலை.
ஒரு காலத்தில் எமது போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இன்று விடுதலை வீரர்களைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளதுடன் இவர்களைத் தடை செய்ததும் ஒரு வரலாறே!
நன்றி முகுந்தன்,
உங்கள் பாஷையில் சொல்வதானால் "அரசு அன்றறுக்கும் தெய்வம் நின்றறுக்கும்" என்பது பழமொழி.
இலங்கை மண்ணிலே இரண்டு ஆட்சி அதிகாரங்கள் உள்ளன என பீற்றிக் கொள்வோர், அவரவர் கட்டுப்பாட்டு மக்களுக்குரிய ஊண், உடை, உறையுள் அத்துடன் பாதுகாப்பு என்பனவற்றை எப்பாடு பட்டாவது கொடுக்க வேண்டும்.
ஆனால் எமது நாட்டில் வேடிக்கை என்னவென்றால் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கவில்லை மக்கள் யுத்தத்தில் சிக்கியுள்ளார்கள், பட்டினிச் சாவு துரத்துகின்றது அரசாங்கம் உதவவில்லை என ஒரு சாரார் கூக்குரல் இடுவது தான்!
அப்படியானால் எதற்காக இந்த யுத்தம், மாவிலாறு அணைக்கட்டின் பலகையினைப் பூட்டும் போதாவது எதிர்கால தூர நோக்குடன் ஒரு கணம் சிந்தித்திருந்தால் எம்மவர்க்கு இந் நிலை ஏற்பட்டிருக்காதல்லவா?
2002 - 2006 இடைப்பட்ட சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டபோது நாமும் நினைத்திருந்தோம் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகின்றது என்று! ஆனால் இப்போது நாம் 1985களில் இரந்து நிலையை விட படுமோசமான நிலைக்கல்லவோ போய்விட்டோம்! இதைச்சொன்னாலும் பலருக்குப் கோபம் வரும்! என்ன செய்வது. யானை தன்தலையில் ஏதோ ஒன்றைப் போட்டதுபோலத்தான் இப்போ எமது கதி!
1985 ஆம் ஆண்டு காலத்துக்கு முற்பட்ட கெரில்லா தாக்குதல்களும், கைக்குண்டு வீச்சும், தெருக்களில் கண்ணிவெடியும், கிளைமோரும் ஏன் மின் பிறப்பாக்கி தகர்ப்பு போன்றனவற்றுடன் ஆட்கடத்தல் கப்பம் கோரல் போன்றன மீண்டும் சுழற்சி முறையில் தலையெடுத்துள்ளனவே !
ஊனமுற்ற உடலங்களும்
உயிரற்ற சடலங்களும்
பட்டினியால் நலிந்த தேகங்களும்
குண்டு துளைத்த தேசமும்
கால் நூற்றாண்டு போராட்டத்தின்
விளைச்சலே!
கவிக்கிழவன் அவர்களின் வருகைக்கு நன்றி.
Post a Comment