
இனி எமக்கெதற்கு...
மனிதத்தை மறுதலித்து
மக்களை அரணாக வைத்து
தாம் தப்பினால் போதுமென
பல்லாயிரம் மக்களை பலியெடுத்து
வரலாற்றில்
புத்திஜீவிகளின் தடமழித்து
துரோகத்தனத்தை இந் ஜென்மத்துப்
பதிவேட்டில் நிரந்தரமாய் பதிவாக்கி
முட்கம்பி வேலிக்குள்
முகமறியாமல் மக்களை முடக்கி
ஊனமுற்ற சந்ததியை பிரசவித்து
தாங்களும் தடமின்றி அழிந்த கதை
இனி எமக்கெதற்கு !


2 பின்னூட்டங்கள்::
நீர் உண்மையாகவே ஈழத்தவரா? இருக்காது..ஒருக்காலும் இருக்க முடியாது.....
தமிழன் உண்மையில் தாழ்வு மனப்பான்மை இயல்பினன். அவனை மீண்டும் வீரனாக்கியவன் எம் தலைவன் பிரபாகரன்.
உம் எழுத்தில் மின்னுவது கோழைத்தனம். அது இன்றைய முட்கம்பி மக்களுக்கு உதவாது.
ஐயா சிவா,
முட்கம்பி வேலிக்குள் முடமாகிக் கிடக்கும் எம்மவரிடம் நேரில் கேட்டுப் பாரும், உமக்கு சரியான பதிலைச் சொல்லுவார்கள்.
அவர்களின் குரலின் சாட்சியமே இந்தப் பதிவு.
Post a Comment