தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

செல் வந்த இவ்வூரில் ! - கவிதை



செல் வந்த இவ்வூரில் !

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

மீண்டும் வருவேனென
மறையும் நீ
சிரித்துச் போகின்றாய்!

நானோ
நாளை இருப்பேனோ
எனக்கே தெரியவில்லை!

கண்ணீரின்றி,
உப்புக் கரித்த முகத்துடன்
நிற்கின்றேன்!

செல் வந்த இவ்வூரில்
ஓடித் தப்பலாம்
பகலிலே!

காரிருளில்
செல்வந்தால்
எங்கோடுவேன்!

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

-------------------களத்துமேடு-

4 பின்னூட்டங்கள்::

இறக்குவானை நிர்ஷன் said...

வலிமிகுந்த வாழ்க்கையை நினைவூட்டும் நல்லதொரு கவிதை.
வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.

பின்னூட்டம் இடுதலில் வர்ட் வெரிஃபிகேஷனை முடியுமானால் நீக்கிவிடுங்கள்.

Unknown said...

கருத்துக்கு நன்றி நிர்ஷன்.

geevanathy said...

///செல் வந்த இவ்வூரில்
ஓடித் தப்பலாம்
பகலிலே!

காரிருளில்
செல்வந்தால்
எங்கோடுவேன்!///

வினாக்குறியோடு நிற்பது கவிதை மட்டுமல்ல எங்கள் வாழ்க்கையும்.

Unknown said...

///செல் வந்த இவ்வூரில்
ஓடித் தப்பலாம்
பகலிலே!

காரிருளில்
செல்வந்தால்
எங்கோடுவேன்!///

வினாக்குறியோடு நிற்பது கவிதை மட்டுமல்ல எங்கள் வாழ்க்கையும்.

வருகைக்கு நன்றி ஜீவா.