தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

என்ன நியாயம்? - கவிதை

"வானம் வெளித்த பின்னும்" வலைப்பூ பதிவர் தோழர் ஹேமாவின் "நீயும் தமிழன் தான்..."
எனும் கவிதைக்கு மறுப்புக் கவிதை.


என்ன நியாயம் ?

எமக்காகத் தளம் தந்து
ஈழப் போருக்கு உரமிட்டு
அவசரமென ஆகாயத்தால் வந்து
பூமாலையாய் ஊண் தந்தவர்
இந்திய மக்களே!

கண்ணீர்த்துளி வடிவ இலங்காவின்
தமிழ் வதைப்புக்கெதிராகக் குரலிட்டு
கடவுச்சீட்டின்றி அகதியாய் தடம்பதிக்க
அனுமதி தந்து உயிர் காப்பவரும்
இந்திய மக்களே!

குரல்வளையை நெரிக்க முனைந்ததால்
குப்புற வீழ்ந்தோமே எனினும்
கண்ணைக் குத்திக்கொண்ட எம்மை
அணைக்க முனைவதும்
இந்திய மக்களே!

ஈழமொன்று அமைவதானால்
பச்சைக்கொடி காட்டவேண்டியவர்கள்
அணுவாயுதத்தால் அண்டத்தையே அதிரவைத்த
ஆசியாவின் வல்லரசு
இந்திய மக்களே!

கல்லைப் பார்த்து காலை வைக்காமல்
அடித்துவிட்டதே கல்லென
கல்லை நொந்து கொள்வதில்
என்ன நியாயம்!

ஆழம் பார்த்துக் கால் வைக்காமல்
ஆழ்ந்தபின் ஆழ்ந்து விட்டோமேயென
நொந்து கொள்வதில்
பயனேது!

3 பின்னூட்டங்கள்::

ஹேமா said...

பார்த்தீர்களா களத்துமேடு.இது நல்ல ஆரோக்கியமான அலசல்தான்.ஆனால் நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!என் கவிதைகளைக் கவனித்துப் பாருங்கள்.நான் யாருக்காகவும் ஒரு பக்கச் சார்பாகப் பேச விரும்புவதில்லை.எங்கள் நாட்டு அரசியல் அப்படி.
எல்லோரிடமுமே நிறையவே தப்புக்களும் பிரச்சனைகளும்.நான் சொல்வதெல்லாம் எங்கள் நாடு,
எங்கள் மக்கள்..புலம் பெயர்ந்த எங்கள் பிரச்சனைகள்,துன்பங்கள்,மன உளைச்சல்கள்தானே!நான் ஒரு போதும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பேசவும் இல்லை எதிர்க்கவும் இல்லையே.சிலர் எங்கள் வலி தெரியாமல் தூற்றுகிறார்கள்.
எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறேன்.அவ்வளவுதான்.

என் தளத்தில் சுரேஷ் ஜீவானந்தம் என்பவர் எவ்வளவு அசிங்கமாக எங்கள் வேதனைகள அசிங்கப்படுத்திருந்தார்.நிச்சயம் கவனித்திருப்பீர்கள்.ஒரு ஈழத்தமிழனாக அவருக்கு பதில் சொல்லாமலே மௌனமாக இருந்துவிட்டீர்கள்."அகதி நாய்களுக்கு செருப்பால் அடித்தாலும் புத்தி வராது என்றார்"இன்னும் என்னென்னவோ!!!அரசியலில் ஆயிரம் ஊழல்கள்.
என்றாலும் சாதரண மக்கள் வலியைப் புரிந்து கொள்ளாமல் அவரைப் போலப் பலர்.அதனாலேயே அந்தக் கவிதையை மறுமுறை பதிவில் இட்டேன்.
என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் சொல்லுங்கள் களத்துமேடு.

இந்தக் கவிதை எழுதினது பாருங்கள் 18.01.2007.அப்போதே ஒரு இந்தியத் தமிழர் எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.நாங்கள் உழைப்புக்காகத்தான் வெளிநாடுகளில் இருக்கிறோமாம்.ஏன் ஆயுதம் எடுத்துச் சண்டை போடுகிறீர்கள் என்கிறார்.படிப்பறிவில்லாதவர்களாம்.இன்னும் நிறைய.எங்கள் போராட்டம் வேதனை தெரியாத இந்திய தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள்.

தவிர நான் என்றும் இந்தியாவை வெறுக்கவில்ல.உண்மையில் என் தாத்தா...அம்மாவின் அப்பா தமிழ்நாட்டைச்(வலங்கைமான்)சேர்ந்தவர்.அப்பாவின் அப்பாவும் இந்தியப் பரம்பரையே.இன்றும் என் சொந்தங்கள் நிறையப் பேர் வலங்கைமானில் இருக்கிறார்கள்.

Unknown said...

வணக்கம் ஹேமா,
தங்களின் பக்கச்சார்பின்மை எனக்குப் புரிந்ததே, இருப்பினும் இப்படியான நடுநிலையற்ற அல்லது உண்மையைப் பேச மறுக்கும் கவிதைகளினால் தளத்துக்கு இருக்கும் மவுசு குறைய வாய்ப்பு இருக்கின்றது.

நகத்தை வெட்ட வேண்டும் என்பதற்காக விரலையும் சேர்த்து வெட்டிவிட முடியாதல்லவா?

நீங்கள் குறிப்பிட்டிருந்த நபர் சொந்த நலன்கருதி பல விடயங்களை பதிவு செய்து வருகின்றார், அத்தோடு எமது நாட்டை வேறு தேசமாக கருதுகின்றார், அவரின் பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையானாலும் கூட சில கருத்துக்கள் நியாயமாகவே படுகின்றது.

//"அகதி நாய்களுக்கு செருப்பால் அடித்தாலும் புத்தி வராது என்றார்"//
நான் சொந்த ஈழ நாட்டிலே அகதியாக வாழ்ந்தவன், இந்நிலையில் எம்மை அகதியென அருவருப்பாக பார்த்த தமிழ் சமுதாயம் எங்களுடையது.

அகதிகள் எனும் காரணத்தினால் அகதியற்றவர்களின் கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ, நீராடவோ, ஏன் சொதிக்காக வேலியில் உள்ள முருங்கை இலையை பிடுங்கவோ முடியாமல் மறுக்கப்பட்டவர்கள்.

இப்படியாக ஈழவர்கள் சிலர் அகதிகளை மாற்றுக் கண்ணால் பார்த்த காலம் இருந்தது, இப்போது முற்றாக மாறிவிட்டதுவென சொல்லமுடியாது.

அகதியென்றால் தீண்டத்தகாதவர்களென ஈழத்தமிழர்களே பார்த்திருக்கும் போது இந்தியர் மட்டும் எம்மாத்திரம்?

Unknown said...

தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்
http://www.thanthi.co.cc