பார் போற்றும் மானிடன் - கவிதை
பார் போற்றும் மானிடன்
வியர்வை சிந்தி
கோடரி கத்தி கொண்டு
காடு வெட்டி கழனியாக்கி
எருதுடன் ஏருழுது
முட்கிழித்து இரத்தம் கசிய
வாய்க்கால் வரம்பு கட்டி
மழையை நம்பி
நெல் விதைத்து
பயிர் பார்த்து
காலத்தே உரமிட்டு
தங்கப்பாளமாம்
செந்நெல் கண்டு
வானத்தைப் பார்த்து
கதிராடாமல்
வேளாண்மை வெட்டி
ஒன்று சேர்த்து
சூடடித்துப் பொலி தூத்தி
பொன் மணிகள் சிந்தாமல்
மூட்டை மூட்டையாய்
பட்டறையிலிட்டு
மானிடனின் பசி போக்க
ஓயாமல் உழைக்கும்
வேளாளா நீ தான்
பார் போற்றும்
மானிடன் !
---------------களத்துமேடு------
குறியீடு:
பார்போற்றும் மானிடன்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்::
களத்துமேடு அவர்களுக்கு உங்கள் இலக்கியமேடு வந்து உலவினேன்.
அருமை.தொடருங்கள்.
உங்கள் களத்துமேடு தளத்தில் இலக்கிய மேட்டையும் இணத்துவிடுங்களேன்.பார்வையிடுபவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.என் அப்பிப்பிராயம்.
நன்றி ஹேமா.
Post a Comment