எம்மவருக்கு ஏது நிம்மதி
யுத்தத்தை வேண்டுமென்றே
எம்மீது சுமையேற்றி
அதிலே குளிர் காய்ந்து
அதிகார சிம்மாசனத்துக்காய்
ஆயிரம் தலை கொய்து
அதன்மீதேறி நின்று
அர்த்தமற்று
சந்தற்பவாத அரசியல் பேசி
மேய்ப்பர்கள் தாமேயென்று
இன்னும் தலையெடுக்க
துணிந்து நிற்பவர்
மனம் மாறும் வரை
எம்மவருக்கு ஏது நிம்மதி!
08.09.2008 "ஜீவநதி" வலைப்பூவில் தோழர் தங்கராசா ஜீவராஜ் பதிவு செய்துள்ள "யுத்தத்தின் முடிவினைத் தேடும் சமாதானத்துக்கான போர்... யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?" எனும் கவிதையைப் பார்த்த போது நானும் பங்கிற்கு ஏதும் எழுதலாமே என்று நினைத்து "எம்மவருக்கு ஏது நிம்மதி" எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.
குறியீடு:
எம்மவருக்கு ஏது நிம்மதி
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்::
நன்றி நண்பரே,
தங்கள் வலைப்பூவில் இணைத்துக்கொண்டதற்கு.
உங்களுடைய இந்த Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.
வருகைக்கும், சுட்டி இணைப்புக்கும் நன்றி த.ஜீவராஜ்.
இந்த நிலை என்று மாறுமோ?
வருகைக்கு நன்றி இனியவள் புனிதா.
//இந்த நிலை என்று மாறுமோ?//???
கவிதையைச் சொன்னீர்களோ தெரியாது!
ஈழவன் காத்துக் காத்துக் காலங்களும், எங்கள் வயதும்தான் கடக்கிறதே தவிர?????
நன்றி ஹேமா.
என்றேனும் ஒரு நாள் நிச்சயம் நிம்மதி கிடைக்கும், நம்பிக்கையோடு நாமிருப்போம்!!
வருகைக்கு நன்றி இசக்கிமுத்து.
Post a Comment